நேற்றுபோல இருக்கிறது
உன் முதல் பிறந்த நாள் கொண்டாடியது
வலது கட்டை விரலை
வாயில் திணித்துக்கொண்டு
இடது கையால்
கேக்கின் மேல் இருந்த
மெழுகு வர்த்தி சுடரை
எடுக்க முயன்ற
உன் சார்பில்
நான் கேக் வெட்டியது
இன்று உன் வயது
பத்தொன்பது
இந்த பிறந்த நாளில்
எங்களை பார்ப்பதற்காக
ஆறு மணி நேரம்
பயணம் செய்து
நள்ளிரவில் வந்து சேர்ந்த
உனக்கு
நாங்கள் கொடுத்த
இன்ப அதிர்ச்சி
உனக்காக காத்திருந்த
கேக்கும்
எங்கள் முத்தங்களும்தான்
ஹாஸ்டலில் மகளை
படிக்க அனுப்பிய
எல்லா பெற்றோரும்
கலங்கும் ஒரு நொடி
இந்தக்கணம் தான்
Monday, 22 March 2010
Subscribe to:
Post Comments (Atom)
அருமை அசத்தல் கண்ணீரும் சந்தோஷங்களும் பொருந்திய தருணம் வாழ்த்துக்கள் ராஜா
ReplyDeleteவாழ்த்துகள் மரு-மகளுக்கு!
ReplyDeletethank you - on behalf of my daughter
ReplyDelete